Saturday, April 10, 2010

562. ஒரு நெஞ்சார்ந்த நன்றி (கௌசல்யா), ஒரு அவசர உதவிக்கு வேண்டுகோள்(முத்துராமன்)

அன்பான தமிழ் வலையுலக/வாசக நண்பர்களே,

கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு வலைப்பதிவர்களும், என் வலைப்பதிவு வாசகர்களும் மனமுவந்து செய்த பொருளுதவியால், இன்று கௌசல்யா தனது மருத்துவப் படிப்பை (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்) முடித்து விட்டார். ஓராண்டு House Surgeoncy. பிறகு Post graduate படிப்புக்கான தேர்வுக்கு வேண்டி பயின்று வருகிறார். உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தலை வணங்கித் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்து வரும் பேராதரவு தான், எனக்கும் சகபதிவர்/நண்பர் ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது

கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்

நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.

அடுத்து, ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, இதுவரை சேகரித்த தொகையின் ஒரு பகுதி, அறுவை சிகிச்சை தள்ளிப் போன காரணத்தால், பரிசோதனைகளுக்கும், டயாலிஸிஸுக்கும் செலவாகி விட்டது. இருந்தும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கைவசமுள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இரண்டரை லட்சம் தேவை என்பதாலேயே இந்த வேண்டுகோள்.

எழுத்தாளர் பாராவின் மனம் நெகிழவைக்கும் இவ்விடுகையையும் வாசிக்கவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
அன்புடன் பாலா - balaji_ammu@yahoo.com

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நேரடியாக நீங்கள் முத்துராமனின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகையில், அது குறித்து விவரங்களை எனக்கு/ராம்கிக்கு மடல் வழி தெரிவித்தால், பணம் வந்து சேர்ந்த தகவலை உங்களுக்கு கன்ஃபர்ம் செய்யவும், சேகரிக்கப்பட்ட தொகையின் கணக்கை சரி பார்க்கவும், தெரிவிக்கவும் உதவியாக இருக்கும்.

தேவையெனில், (மடல்வழி தொடர்பு கொள்ளும் நண்பர்களுக்கு) எனது/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்களை/முகவரியைத் தருகிறேன். இதற்கு முன் உதவி முயற்சிகளுக்கு பணம் அனுப்பிய நண்பர்களிடம் என்/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும். மீண்டும் சிரம் தாழ்த்தி உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.

அன்புடன்
பாலா

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

தொகை சிறிதாக இருப்பினும், முடிந்த பொருளுதவியைச் செய்து உதவுமாறு வேண்டுகிறேன். நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இப்பொழுது தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளம் மூலம் - ஆன் லைன் ட்ரான்ஸ்பராக ரூபாய் 1001/- அனுப்பி உள்ளேன்.
UTR No IOBAN10102000086

Name Muthu Kumar

Address Mogappair, Chennai

Date 12/04/2010

IFSC Code SBIN0005090

Account Number 30963258849

Amount Rs.1001.00
வந்து சேர்ந்த விபரம் தெரிவித்தால் நலமாக இருக்கும்

சரியான IFSC CODE : SBIN0005090 - அனைத்து இடுகைகளிலும் இது தவறாக SBI 0005090 எனக் குறிப்பிடப் படுகிறது. இதனால் பண மாற்றம் செய்ய இயலவில்லை.

மாற்றுக

சிகிச்சை வெற்றி பெறவும் - விரைவினில் குணம் பெறவும் நல்வாழ்த்துகள்

enRenRum-anbudan.BALA said...

அன்பின் சீனா,

மிக்க நன்றி. அவர் பெயர் முத்துராமன், முத்துகுமார் இல்லை! இருந்தாலும் கன்ஃபர்ம் செய்கிறேன், விசாரித்து.

//சரியான IFSC CODE : SBIN0005090 - அனைத்து இடுகைகளிலும் இது தவறாக SBI 0005090 எனக் குறிப்பிடப் படுகிறது.//
தவறை சுட்டியமைக்கு நன்றி. இடுகையில் திருத்தி விடுகிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails